பல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய பொலிஸாரால் பல நாட்களாக வலை வீசி தேடப்பட்டு வந்து கொள்ளைக் கும்பல் ஒன்றை நேற்று இரவு பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 29,30 மற்றும் 34 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் பொரளை கடுவெல மற்றும் நாரஹென்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 24ஆம் திகதி 538,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நேற்று பம்பலப்பிட்டி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 220,540 ரூபாய் பெறுமதியான 5 பவுண் தங்க சங்கிலியை அடகு வைத்த பற்றுச்சீட்டும், 55,000 ரூபாய் பணத்தொகையும் பெறுமதியான கமெரா ஒன்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.