டிக்கோயா - மாணிக்கவத்தை தோட்டத்தில் இடி தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவரே இடித்தாக்குதலுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.