இந்தோனேசியாவில் உள்ள  பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் திருட்டுத்தனமாக பெட்ரோல் திருட நேற்று  அதிகாலை பலர் முகாமிட்ட போது திடீரென பெட்ரோல் கிணறு வெடித்துள்ளது.

பெற்றோல் கிணறு வெடித்ததில் தீ கொழுந்து விட்டெறிந்துள்ளது இத் தீ விபத்தில் கிச்கியே 15 பேர் பலியானதோடு 40க்கும் மேற்பட்டோர்  எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.