சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!!

Published By: Digital Desk 7

26 Apr, 2018 | 02:18 PM
image

நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார்.

கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்று அறிவித்தார். அவர் யார் என்று அதுவரை ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. பிறகு நடிகர் சூர்யா அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவந்தது. தங்கையின் பால்ய வயது கனவை நனவாக்கியதற்காக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் சாம் சி எஸ், இயக்குநர் திரு உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது நடிகர் சிவக்குமார் அனுப்பிய வாழ்த்து செய்தியை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வாசித்து காட்டி பிருந்தாவை வாழ்த்தினார். இந்த படத்தில் பிருந்தா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இதை கேட்ட ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37