இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் பாடசாலை வாகனம் மீது ரயில்

மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை

ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பாடசாலை

மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆளில்லாத ரயில் கடவையை கடக்க

முயன்ற போது அந்த நேரத்தில் வேகமாக வந்த பாடசாலை வாகனத்தின் மீது

மோதியது.

ரயிலில் மோதிய பாடசாலை வாகனம் தூக்கி வீசப்பட்டதில் அவ் வாகனத்தில்

பயணித்த மாணவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி

உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் உயிரிழந்த

மாணவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதோடு

சம்பவத்தில் காயமடைச்த மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.