பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை  பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சந்தேக நபர்கள் நேற்று  இரவு 11மணி அளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்  சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்த பட்ட ஒரு சில உபகரணங்களையும்  மீட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதி மன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது