பதுளை - மஹியங்கனை வீதியில் பயணித்து கொண்டிருந்த வாகனம் ஒன்று வியானி கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பொலன்னறுவை - ஹிங்குராங்கொடை பிரதேச வர்த்தகர் ஒருவரின் ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் வாகனத்தினை கால்வாயிலிருந்து வெளியே கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் வாகனத்தில் எவரும் இருக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.