ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மேலும் பலப்படுத்துவது கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியை  பலப்படுத்துவது என கட்சியின் பாராளுமன்ற  குழு தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் இது குறித்து நீண்டநேரம் ஆராயப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியை பலப்படுத்துவதற்கு அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.கட்சியை பலப்படுத்தவேண்டும் என்பது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரேநிலைப்பாடே உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.