கொழும்பின் இரு வேறுப் பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவத்த பகுதியில் 5கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினுடன் களனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை இன்று காலை அளுத்கடை நீதவான் நீதமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கொம்பனித்தெரு பொலிஸாரால் நேற்று இரவு 8 மணியளவில் 2 கிராம் 420மில்லி கிராம் ஹெரோயினுடன் 31 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.