புத்தளம் - வந்தமதெமனிய பிரதேசத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காணியில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்கு தொலைப்பேசி அழைப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற ரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் குடாகம்மான லுணுகம்வேஹெர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

மேலும் இச் சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காணியில் பயிர்செய்கை செய்யப்பட்ட 50,000 கஞ்காச் செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.