கண்டிக் கலவரத்தின் பிரதான சந்தேக நபர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியிருக்கும் இரு பிரதேச சபை உறுப்பினர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

திட்டம் தீட்டி கண்டி மாவட்டம் எங்கும் இன ரீதியிலான அரங்கேற்றிய வன்முறைகள் தொடர்பில் இது வரை 32 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் மற்றும் இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர்.