ஒடிசாவில் மனைவி இரண்டாவது  திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த  கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரமேஷ் குமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 18 வயதான சங்கீதா சவுத்ரி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து சில நாட்களில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சங்கீதா கோபித்துக் கொண்டு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் ரமேஷ் குமார் மீது சங்கீதா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சங்கீதாவின் பெற்றோர் சங்கீதாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் சங்கீதாவின் குடும்பத்தினர் மீது ரமேஷ் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந் நிலையில் சங்கீதா தொடர்ந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சங்கீதா தனது தாயார் மற்றும் 3ஆவது சகோதரியுடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

ஏற்கனவே அவர்கள் மீது கோபத்தில் இருந்த ரமேஷ் அவர்களைக் கண்டதும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதா, அவரது தாய் மற்றும் சகோதரியையும் வெட்டியுள்ளார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலே பலியானார்.

படுகாயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் ரமேஷ் குமாரை கைது செய்து பொலிஸ் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.