நவகத்தேகம, வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த  தந்தை ஒருவர் தனது மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

மகனுக்கும் தந்தைக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  குறித்த ஆயுதத்தால் மகனை தந்தை மது அருந்திய நிலையில்  தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில் புத்தளம்  மருத்துவமனையில்  அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனவும்   தந்தை நவகத்தேகம பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.