காலிமுகத்திட வீதியானது லோட்டஸ் சுற்றுவட்டம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஒன்றிணைந்த தொழில் கோரும் பட்டதாரிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.