பர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம்

Published By: Robert

24 Apr, 2018 | 11:26 AM
image

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் எழுந்­துள்ள நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இன்று கூடு­கின்­றது.  

எதி­ர­ணியில் அம­ர­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 உறுப்­பி­னர்­களும் தமது இறுதி நிலைப்­பாட்­டினை இன்று முன்­னெ­டுப்­பார்கள் எனவும் தெரிய வரு­கின்றது. 

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 உறுப்­பி­னர்­களுள் அமைச்­சுப் ­ப­த­வி­களை வகித்த அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் பதவி வில­கி­யுள்­ளமை மற்றும் 16 உறுப்­பி­னர்­களும் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எதி­ர­ணியில் அமரவுள்­ள­தாக கோரிக்கை முன்­வைத்­துள்ள நிலையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தீர்­மானம் மிக்க மத்­தி­ய­ குழு கூடு­கின்­றது. 

ஜனா­தி­ப­தியின் வெளி­நாட்டு விஜ­யத்தை அடுத்து கட்­சிக்குள் பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள் எழுந்­தி­ருந்­தன. 

குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் பொதுச்­செ­ய­லா­ளர்கள் மாற்­றப்­பட வேண்டும் எனவும் எதிர்க்­கட்­சியில் அமர ஜனா­தி­பதி அனு­மதி வழங்க வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்த நிலையில் அவை அனைத்து விட­யங்கள் தொடர்­பிலும் இன்று கூடும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்ளது.  

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தில் இருப்­பதா அல்­லது தனித்துச் செயற்படு வதா என்ற கேள்விக்கான விடையும் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் தெரிய வருவதாக ரணில் எதிர்ப்பு அணி யினர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46