நாட்டில் கடந்த காலங்­களில் சிறைச்­சா­லை­களில் நில­விய சுமார் 1550 பதவி வெற்­றி­டங்­களை நிரப்பும் முக­மாக இவ்­வாண்டு முதல் சிறைச்­சாலை முறை­மையை  வலுப்­ப­டுத்தும் திட்­டத்தை அமுல்­ப­டுத்­த­வுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள்  அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன்  தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள  அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 

கடந்த ஆண்டு முதல் சிறைச்­சாலை திணைக்­க­ளத்தில் நில­விய உத்­தி­யோ­கத்தர் பற்­றா­க்கு­றையை நிவர்த்தி செய்யும் முக­மாக 2017ஆம் ஆண்டில் 350 சிறைச்­சாலை காவ­லா­ளிகள்  இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.  இவ்­வாண்டில் 1200 சிறைச்­சாலைக் காவ­லா­ளி­களை ஆட்­சேர்ப்பு செய்ய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு தேவை­யான  நேர்­முக பரீட்­சைகளை நடாத்தி ஆகஸ்ட் மாத இறு­திப்­ப­கு­திக்குள் 1200 உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் உரிய பயிற்­சி­களை வழங்கி சேவை­களில் ஈடு­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

அதே­ச­மயம் சிறைச்­சா­லை­களில் இடம்­பெறும் முறை­கே­டுகள், வன்­மு­றைகள், போன்­ற­வற்றை தடுக்கும் முக­மாக சிறைச்­சா­லை­க­ளெங்கும் சிசி­ரிவி கம­ராக்­க­ளையும்,   கைய­டக்க தொலை­பே­சி­யூ­டான  செய்­தி­களை தெளி­வற்­ற­தாக்கும் முறை­மை­யொன்­றையும் நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.  

இரண்டு வருட காலத்­துக்குள் 1500க்கும்  கூடு­த­லான வேலை­வாய்ப்­புக்­களை சிறைச்­சாலை  திணைக்­க­ளத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்க பூரண ஒத்துழைப்பை நல்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோருக்கு எனது அமைச்சின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்  கொள்கின்றேன்.