(கே.லாவண்யா)

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது. இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பு எவையும் சீனாவின் இராணுவ ஆதிக்கத்தினை இலங்கையில் நிலைநாட்டும் நோக்கத்துடனானது அல்ல என இலங்கைக்கான சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான் தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக வெளிவரும் வதந்திகள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன தூதுவருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

இதன் போதே சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.