லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ என்ற படத்தின் தலைப்பு தற்போது ‘தியா ’என்று மாற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஏப்ரல் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திரையுலகில் அனைத்த தரப்பு மக்களும் பார்க்கும் வகையிலான ‘யூ ’தணிக்கை சான்றிதழ் பெறும் படங்களை இயக்குவதில் தன்னிரகற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குநர் ஏ.எல் விஜய். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கரு. இந்த படத்தின் மூலம் நடிகை சாய் பல்லவி தமிழில் கதையின் நாயகியாக அறிமுகமாகிறார். கரு கலைப்பு பற்றி எமோஷனல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நாக சௌரியா நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலக வேலைநிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியிருக்கும் திரைப்பட வெளியீட்டில் கரு படத்தின் தலைப்பு தியா மாற்றப்பட்டு வெளியாகவிருப்பதாக படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.