எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் தலைவர் அனா புஞ்சிஹேவா போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய வேளை, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக அனா புஞ்சிஹேவா கடமையாற்றினார்.

இந்நிலையில், கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற  தேர்தலில் திலங்க சுமத்திபாலவிடம் தோல்வியடைந்தார்.

இதனால் அவர் கொல்ப் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

இதனையடுத்து எதிர்வரும் மே மாதம்  9 ஆம் திகதி நடைபெறவுள்ள கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் மீண்டும் அனாவை போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். 

எனினும் இதுத் தொடர்பில் தாம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அனா புஞ்சிஹேவாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.