ஜப்பான் நாட்டின் ககோஷிமா என்ற பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த உலகின் மிக வயதான பெண் என்ற பெருமையை பெற்ற நபி தஜிமா என்பவர் கடந்த ஜனவரி மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

1900ஆம் ஆண்டில் நபி தஜிமா பிறந்ததால் 19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதராக திகழ்ந்த இவருக்கு பேரக்குழந்தைகள் மட்டுமே 160 பேர் உள்ளனர்.

உலகின் வயதான பெண்ணான நபி தஜிமா மரணம் அடைந்ததை அடுத்து இந்த பெருமையை தற்போது அதே ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்ணான சியோ மியாகோ என்பவர் உலகின் மிக வயது முதிர்ந்த பெண் என்ற இடத்தினை பிடித்துள்ளார். இவருக்கு 117 வயதை அடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.