இந்தியா ஹரியானா மாநிலத்தில் பாடசாலை தலைமை ஆசிரியையை மாணவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் யமுனா நகரில் தனியார் பாடசாலையின் 47 வயதான ரித்து சாஹப்ரா என்ற தலைமை ஆசிரியை 12 ஆம் வகுப்பில் படித்து வரும் கேசவ் என்ற மாணவன் சரிவர படிக்காததால் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியையை கொல்ல திட்டமிட்டு, தனது தந்தையின் துப்பாக்கியோடு தலைமை ஆசிரியையின் அறைக்கு சென்ற கேசவ், தலைமை ஆசிரியையை சரமாரியாக சுட்டுள்ளான். இதில் தலைமை ஆசிரியை சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மாணவனை கைது செய்து பொலிஸ் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.