உலகத் தமி­ழர்­களின் ஒன்­று­கூடல் மா­நாடு

Published By: Robert

23 Apr, 2018 | 11:26 AM
image

பன்னாட்டு தமிழ்ச்­சங்கக் கூட்­ட மைப்­புத் ­த­லை­வர்­ த­ணி­கா­சலம், தென்­பு­லத்தார் பன்­னாட்டுத் தமிழர் கூட்­ட­மைப்பு நிறு­வுநர் ஓரிசா பாலு, கம்­போ­டியா தமிழ் பேரவை தலைவர் ராம­சாமி, தென்­கி­ழக்­கா­சியத் தமிழ் சங்க ஒருங்­கி­ணைப்­பாளர் விசாகன் மைலா­சலம் ஆகியோர் ஏற்­பாடு செய்­துள்ள உலகத் தமிழர் மாநாடு எதிர்­வரும் மே மாதம் 19, 20 ஆம் திக­தி­களில் கம்­போ­டியா அங்­கோர்வாட் கோயி­லுக்கு அருகில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­கழ்வில் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், கல்வி ராஜாங்க அமைச்ச­ரு­மான வே. இரா­தா­கி­ருஷ்ணன் கலந்து கொண்டு மா­நாட்டை ஆரம்­பித்து வைத்து உரை நிகழ்த்­த­வுள்ளார். மாநாட்டில் உலகில் பல்­வேறு நாடு­களில் இருந்தும் பேரா­ளர்கள் கலந்து கொள்­வார்கள் என எதிர்

­பார்க்­கப்­ப­டு­கின்­றது. முதன்மை­யாக தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளான மலே­ஷியா, சிங்­கப்பூர், தாய்­லாந்து, மியான்மர், இந்­தோ­னே­சியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ், புருனே, பப்­பூவா நியூகினி ஆகிய நாடு­களில் வசிக்கும் தமி­ழர்கள் ஒன்று கூடி உலக நாடு­களில் இருந்து வருகை தரும் தமி­ழர்­க­ளுக்கு தென்­கி­ழக்­கா­சி­யாவின் பழமை வாய்ந்த பாரம்­ப­ரிய கோயில்கள், தற்­போ­தைய தென்­கி­ழக்­கா­சிய மக்­களின் வாழ்க்­கை­யுடன் பின்னிப் பிணைந்­துள்ள பண்­டைய கால தமி­ழர்­களின் கலை, பண்­பாடு, கலா­சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளை­யாட்டு, விவ­சாயம், கட்­ட­டக்­கலை, தமிழ் மொழியின் பரவல் போன்ற தமி­ழரின் பெரு­மை­களைப் பறை­சாற்ற உள்­ளனர்.

பிற ஆசிய நாடு­க­ளான சீனா, ஜப்பான், கொரியா, தாய்வான், இலங்கை மற்றும் கனடா, அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஜேர்­மனி, பெல்­ஜியம், டென்மார்க், ஆபி­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, டுபாய், சவூதி அரே­பியா போன்ற பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்தும் தமி­ழர்கள் ஒன்று கூடு­வார்கள் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த மாநாட்டில் கம்­போ­டி­யாவின் சியாம் ரீப் தென் கிழக்­கா­சிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து தமி­ழுக்­கான இருக்கை அமைப்­ப­தற்­கான ஒரு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­க­வுள்­ளது. மேலும் உலகத் தமிழர் ஒன்­றி­ணைந்து பன்­னாட்டு வணிக மையம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. தென் கிழக்கு மற்றும் கம்­போ­டிய மக்­களும் தமிழ்­நாட்டில் இருந்தும் இலங்­கையில் இருந்தும் அமைச்­சர்கள், துணை­

வேந்­தர்கள், தொழி­ல­தி­பர்கள், தமிழ் ஆர்­வ­லர்கள், திரைத்­துறை பிர­மு­கர்கள், பேரா­சி­ரி­யர்கள், பத்­தி­ரி­கை­யா­ளர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். 

இந்­நி­கழ்வு தொடர்­பான மேல­திக விவ­ரங்­களை ஒரிசா பாலு 91 99402 40487 தணிகாசலம் 9198846 12351 கம்போடியா ராவ் 855 969296 456 விசாகன் 94 660  60030, 628159898211 விக்கி: 0777 318030 வீரமூர்த்தி 077 6494836 ஆகியோரு டன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06