பேஸ்புக் உள்­ளிட்ட ஏனைய சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பொதுமக்­க­ளி­டத்தில் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­படும் குழுக்கள் சில உரு­வா­கி­யுள்­ளன. எனவே இது தொடர்பில் பொது­மக்கள் மிகுந்த அவ­தா­னத்­து­டனும் விழிப்­பு­டனும் செயற்­ப­ட ­வேண்டும் என  இலங்கை சுங்க திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

இலங்கை சுங்க திணைக்­கள பணிப்­பாளர் நாய­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மேற்­படி விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக மோச­டியில் ஈடு­படும் குழுக்கள் பொதுமக்­க­ளுடன் தொடர்­பு­களை பேணி குறிப்­பாக பெண்­க­ளிடம் திரு­மணம் தொடர்­பான பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கின்­றன. இலங்கை சுங்க திணைக்­க­ளத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற தக­வலின் படி, சுங்­க தி­ணைக்­க­ளத்தின் பெய­ரையும் உப­யோ­கித்து இக் குழு­வினர் வெளி­நாட்­ட­வர்கள் போல் செயற்­பட்டு வரு­கின்­றனர். 

இவ்­வாறு வெளி­நாட்­ட­வர்கள் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தி கொள்ளும் இவர்கள் பெறு­ம­தி­ மிக்க  பொருட்­களை தாம் தொடர்பு கொள்­ப­வர்­க­ளிடம் அவர்­க­ளுக்கு அனுப்­ப­வுள்­ள­தாக தெரி­வித்து தமது கொள்ளை முயற்­சியை ஆரம்­பிப்­பதே    முதற்­கட்ட ஏமாற்று நட­வ­டிக்­கை­யாக உள்­ளது. 

பின்னர் தம்மை தபால் பொதி சேவை­யாளர் என தெரி­வித்து அவற்றை பெற்றுக் கொள்­வ­தற்­கான தீர்­வையை செலுத்தி பொருட்­களை பெற்றுக் கொள்­ளு­மாறும், தீர்­வைக்­காக குறிப்­பிட்ட ஒரு தொகைப் பணம் செலுத்­தப்­பட வேண்டும் எனவும் தெரி­விக்­கின்­றனர். அந்த பணத்­தொ­கையை அவர்கள் குறிப்­பிடும் வங்கி கணக்கில் வைப்பு செய்­யு­மாறு கூறி பணம் வைப்­பி­லி­டப்­பட்­டதன் பின்னர் தொடர்பை துண்­டித்து விடு­கின்­றனர். 

இவ்­வா­றான மோசடி செயல்கள் கார­ண­மாக வெளி­நா­டு­களில் வசிக்கும் இலங்­கை­யர்­களும், உள்­நாட்­ட­வர்கள் பலரும் கணி­ச­மா­ன­ளவு பணத்தை இழந்­துள்­ள­தாக தெரி­ய­ வந்­துள்­ளது. எனவே இது தொடர்­பான தெளிவைப் பொதுமக்கள் அனை­வரும் சுங்க திணைக்­க­ளங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டும்.  இலங்கை தபால் திணைக்­க­ளத்தின் 0112328644, 011-2447844 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளி­னூ­டாக தொடர்பு கொண்டு வெளி­நாட்டு பொதி­களை பெற்றுக் கொள்ளல் தொடர்­பான விப­ரங்­களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை இவ்­வா­றான கொள்ளை குழுக்கள் தொடர்பில் விழிப்­புடன் இருப்­ப­தோடு, இது போன்ற சட்­ட­வி­ரோ­த­மான செயற்பாடுகள் பற்றி அறியும் பட்சத்தில் இலங்கை சுங்க திணைக் களத்தின் புலனாய்வு மற்றும் விசாரணை பணியகத்திற்கு 011-2471471 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தெரியப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.