சுதந்­திரக் கட்­சியின் யோசனை இன்று ஜனா­தி­ப­தி­யிடம்

Published By: Robert

23 Apr, 2018 | 09:27 AM
image

தேசிய அர­சாங்­கத்தை பல­மாக முன்­னெ­ டுத்து செல்­வ­தற்கு செய்­து­கொள்ளும் உடன் ப­டிக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தயா­ரித்­துள்ள யோச­னை­களை உள்­ளடக்­கிய வரைபு  இன்று ஜனா­தி­பதியிடம்  கைய­ளிக்­கப்­படும் என அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணங்கும் நிலையில் புதிய உடன்­ப­டிக்கை ஒன்­றினை  செய்­து­கொள்ள முடியும் எனவும் அவர்  குறிப்­பிட்டார். 

ஐக்­கிய தேசியக் கட்சி –- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்து தேசிய அர­சாங்­கத்தை கொண்டு நடத்தும் புதிய உடன்­ப­டிக்­கையை   செய்­து­கொள்ள  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தலை­மையில் குழு­வொன்றை ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள நிலையில் உடன்­ப­டிக்கை குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 

தேசிய அர­சாங்­க­மாக அடுத்த இரண்டு ஆண்­டு­களை முன்­னெ­டுத்து செல்லும் தீர்­மானம் இப்­போது எட்­டப்­பட்­டுள்­ளது. இதில் புதிய வேலைத்­திட்­டங்கள், கொள்­கைகள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன.  தேசிய அர­சாங்­கத்தில் பங்­கு­கொண்டு பிர­தான இரண்டு கட்­சி­க­ளையும் இணைத்த வகையில் இரண்டு கட்­சி­களின் ஒரு­மித்த வேலைத்­திட்­ட­மா­கவே இது கரு­தப்­ப­டு­கின்­றது. இதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் நட­வ­டிக்­கை­களோ அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் வேலைத்­திட்­டங்­களோ அன்றி  இரண்டு கட்­சி­களின் பொது­வான நடு­நி­லை­யான வேலைத்­திட்­ட­மா­கவே இந்த உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சார்பில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­வி­ன­ருக்கு  இடையில் இது குறித்து ஆரா­யப்­பட்டு அறிக்­கையும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்­கையை நாம் ஜனா­தி­ப­திக்கு நாளை ( இன்று ) கைய­ளிக்க தீர்­மா­னித்­துள்ளோம். எமது கார­ணிகள் குறித்து ஆரா­யப்­பட்டு அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் முன்­வைக்கும் கார­ணி­க­ளையும் உள்­ள­டக்கி ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் இறுதி தீர்­மானம் ஒன்­றினை  முன்­னெ­டுப்­பார்கள்.  இரு தரப்பும் இணக்கம் தெரி­விக்கும் பட்­சத்தில் தேசிய அர­சாங்­கத்தின் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்று கைச்­சாத்­தி­டப்­படும். 

 ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் நாளை அல்­லது நாளை மறு­தினம் கூட­வுள்­ளது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சீர­மைப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் புதிய அமைச்­ச­ரவை மாற்­றங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மாற்­றங்கள் குறித்து இன்னும் தீர்­மா­னங்கள் எவையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 

ஜனா­தி­பதி நாட்டில் இல்லாத நிலையில் இந்தக் காரணிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே தலைவர்  இல்லாது இவற்றை எல்லாம் எம்மால் விமர்சிக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சகல சர்ச்சைகளுக்கும் இந்த வாரம் இறுதித் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41