தொழிற்­சாலை முகா­மை­யா­ள­ருக்கு விளக்­க­ம­றியல்.!

Published By: Robert

22 Apr, 2018 | 02:09 PM
image

ஹொரணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட  பெல்லப்­பிட்­டிய பகு­தியில் உள்ள இறப்பர் தொழிற்­சா­லையின் அமோ­னியா தாங்­கிக்குள் விழுந்து  ஐந்­துபேர்  உயி­ரி­ழந்த  விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட நி­று­வ­னத்தின் முகா­மை­யாளர் ரட்­ண­சிறி எதி­ரி­சிங்­கவை  எதிர்­வரும் 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. 

கடந்த வியாழக்கிழமை மாலை கைது செய்­யப்­பட்ட குறித்த முகா­மை­யாளர்  இரவு  முழு­வதும் இடம்­பெற்ற விசா­ர­ணை­யினை அடுத்து நேற்று முற்­பகல் ஹொரணை பதில் நீதிவான் காந்தி கன்­னங்­கர முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே இவ்­வாறு விள்­ளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. 

பாரா­மு­க­மா­கவும் பாது­காப்பு விதி­மு­றை­களை கபை­பி­டிக்­காமை ஊடா­கவும் ஐநது உயிர்கள் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக இருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் தண்­டனை சட்­ட­கோ­வையின்  297,277 ஆகிய அத்­தி­யா­யங்­களின் பிர­காரம் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மொன்றை புரிந்­துள்­ள­தாக பொலிஸார் நேற்று நீதி­மன்­றுக்கு அறிக்கை தாக்கல் செய்­தனர். அதன்­ப­டியே அவர் எதிர்­வரும் 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். 

இத­னி­டையே இந்த அன­ரத்­தத்­தின்­போது உய­ரி­ழந்த 41 வய­தான பியந்­த­கு­மார பெரேரா, 32 வய­தான  திலிப் கசுன், 28 வய­தான  லால்புஷ்;ப குமார, 23 வய­தான வருண சந்­தி­ர­சே­கர, 44 வய­தான  ஆரி­ய­பால பெரேரா, ஆகி­யொரின் சட­லங்கள் மீதான பிரேத பரி­சோ­த­னை­களும்  நேற்று இடம்­பெற்­றன. 

அத்­துடன் சம்­பவம் இடம்­பெற்ற தொழிற்­சா­லைக்கு நேற்று அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் சென்று விஷேட சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்தார்.   குறித்த தொழிற்­சாலை உரிய முறையில் கழி­வ­கற்றல் செயற்­பாட்டை முன­னெ­டுக்­க­வில்லை என குற்றம் சாட்டி அதனால் தமது கிரா­மத்­திற்கு பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக கூறியும் ஊர் மக்­களும் இந்­நி­று­வ­ன­த­தற்கு எதி­ராக போராட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். 

எவ்­வா­றா­யினும் நிலைமை கைமீறி செல்­வதை மேல­திக பொலிஸ் படை ஊடாக பொலிஸார் தடுத்­தனர். இத­னை­ய­டுத்து நேற்­றைய தினம் அந்த தொழிற்­சா­லைக்கு  விஜயம் செய்த மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் அதி­கா­ரிகள் உரிய கழி­வ­கற்றல் நிய­மங்கள் பின்­பற்­றப்­ப­டாமை தொடர்பில்  இந்­நி­று­வ­னத்தில்  சுற்­றாடல் அறிக்­கையை இரத்து செய்­தி­ருந்­தனர். 

இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிறை­வுறும் வரையில்  இந்த இரத்து அமுலில் இருக்கும் என அறிய முடி­கின்­றது. இதனிடையே இந்த தொழிற்சாலையை முற்றாக இழுத்து மூட நடவடிக்கை எடுப்பதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று அவர் அப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த  பின்னர் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33