அமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Image result for ஜீ.எஸ்.பி வரிச் சலுகை

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23 இல் கையொப்பமிட்டிருந்தார்.

அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை கடந்த 2017ம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு ஜனவரி 1, 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டன.

எனினும் மீண்டும் வரிச்சலுகையை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

இதனடிப்படையிலேயே குறித்த வரிச்சலுகையை இன்று முதல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.