ஆபத்­தான இடங்­களில் செல்ஃபி எடுத்தால் அப­ராதம் விதிக்க மும்பை பொலிஸார் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

செல்ஃபி மோகம் உலகம் முழு­வதும் வேக­மாக பரவி வரு­கி­றது. இதன் கார­ண­மாக ஆபத்­தான இடங்­களில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயன்று பலர் உயி­ரி­ழக்கும் சம்­ப­வங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இவ்­வாறு செல்ஃபி மோகத்தால் ஏற்­படும் உயி­ரி­ழப்பை தடுக்க மும்பை பொலிஸார் அப­ராதம் விதிக்க முடிவு செய்­துள்­ளனர். அதன்­படி, மும்­பையில் பாந்­திரா பாண்டு ஸ்டாண்டு, கடற்­கரை உட்­பட 15 இடங்­களில் செல்ஃபி எடுப்­ப­தற்கு தடை விதிக்க அவர்கள் முடிவு செய்துள்­ளனர். மேலும் தடையை மீறி ஆபத்­தான இடங்­களில் செல்ஃபி எடுப்­ப­வர்­க­ளுக்கு மும்பை பொலிஸ் சட்­டத்தின் கீழ் 1,200 ரூபா அப­ராதம் விதிக்­கவும் திட்­ட­மிட்டுள்­ளனர்.

இது­ கு­றித்து மும்பை துணை பொலிஸ் ஆணையா ளர் சஞ்சய் கடம் கூறும்­போது, ''செல்ஃபி மோகத்தால் பொதுமக்கள் உயி­ரி­ழப்­பதை தடுக்­கவே நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம். மக்­களின் நல­னிற்­கா­கவே ஆபத்­தான இடங்­களில் செல்ஃபி எடுப்­ப­வர்­க­ளுக்கு அப­ராதம் விதிக்க முடிவு செய்­துள்ளோம். மேலும், செல்ஃ­பிக்கு தடை விதித்த பகுதிகளில் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.