சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில் மரணமடைந்துள்ளார்.

அவரது இறப்பு குறித்து எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில், அவிச்சியின் பிரதிநிதி ஒருவர் அவரது மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“டிம் பெர்ஜ்லிங் என்னும் அவிச்சியின் மரணம் நம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்” எனக் கூறியுள்ளார்.

முந்தைய காலங்களில் பித்தப்பை கோளாறு மற்றும் குடல்வால் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்த அவிச்சி கடந்த 2016ஆம் ஆண்டு தான் உலகச் சுற்றுலா மேற்கொள்வதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

உலகின் தலைசிறந்த டிஜே வாக கருதப்படும் அவிச்சி "வேக்ஸ் மீ அப்", "லெவல்ஸ்", "லோன்லி டூகெதர்" போன்ற பல படைப்புகளை இயற்றியுள்ளார்.

இந்நிலையில் அவிச்சியின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.