ஹெரணை – பெல்லப்பிட்டிய  இறப்பர் தொழிற்சாலையில் நேற்று முன் தினம்  ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை உரிமையாளர் வழங்கிய இழப்பீட்டை  குடும்பத்தார்  நிராகரித்துள்ளனர்.

பாணந்துறை வைத்தியசாலைக்கு  வந்த தொழிற்சாலை உரிமையாளர் தமக்கு 50,000 ரூபா இழப்பீட்டை வழங்க முயற்சித்ததாகவும், எனினும் தானும் ஏனையவர்களும்  குறித்த பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என  உயிரிழந்த தொழிலாளர் ஒருவரின் உறவினர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், குறித்த இறப்பர் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடிக்குமாறு, அதன் நிர்வாக அதிகாரியிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கியதாகவும், எனினும் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை இறப்பர் தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தறங்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.