கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும்  மே மாதம் முதலாம் திகதி முதல் அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து  சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  கரையோர பாதுகாப்பு  திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்தர கீர்த்தி இதனைத் தெரிவித்தார்.