சீனாவில் நவீன வசதிகளுடன் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி  வசதியுடன் கூடிய பொதுக் கழிவறைகள்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நவீன கழிவறைகள் குறித்த திட்டமிட்டுள்ள நிலையில் தற்போதுதான் அவை நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த கழிவறைகளில்  பல்வேறு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் கழிவறைகளிலேயே இருந்துவிடவும் முடியாது. ஏனெனில் ஒருவர் கழிவறையினுள் நுழைந்து 10 நிமிடங்களில் வெளியே வருமாறு அலாரம் அடித்து விடுமாம் 

தொலைக்காட்சி, வைபை, உட்பட பல்வேறு வசதிகள் உண்டு. சீனாவுக்கு சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த நவீன கழிவறை வசதியை சீன அரசு செய்துள்ளது.

இந்த கழிவறைகள்  தற்போது இரண்டு நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் கிராமங்கள் உட்பட பல இடங்களில் இந்த வசதி செய்து தரப்படும் என்றும் சீன அதிபர் கூறியுள்ளார்.