நாட்டில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முச்சக்கரவண்டி சாரதியின் வயது 35 ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர்  நடைமுறைப்படுத்தவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.