இயக்குநர் சேரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சேரன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் "மூன்று பேர் மூன்று காதல்". இந்த படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சேரன் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன் நடிகை சுகன்யா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இன்வெஸ்டிகேட் திரில்லராக உருவாகும் இதனை அறிமுக இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்குகிறார். இறுதிக்கட்ட படபிடிப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை  படகுழுவினர் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு இணையத்தில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.