சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘காலா’ ஜுன் 7 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரகனி, ஹுமா குரேஸி, அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால், சுகன்யா, அரவிந்த் ஆகாஷ், ஷாயாஜி ஷிண்டே, ரவி காளே என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் பா. ரஞ்சித். அத்துடன் இப்படத்தில் தயாரிப்பாளர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

தமிழ் திரையுலக வேலை நிறுத்தத்தால் இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது ஜுன் மாதம் 7ஆம் திகதியன்று இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.