பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நால்வரும் வத்தளை ஹேகித்த பகுதில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 150 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவையும் 2 கிலோகிராம் ஹசீஸ் போதைப்பொருளையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.