வங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது !  

Published By: Priyatharshan

21 Apr, 2018 | 08:09 AM
image

பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கடமையாற்றிய பெண் கணக்காளர் ஒருவர்  கேகாலையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய குறித்த பெண் அதே வங்கியில் 2 கோடியே 29 இலட்சத்து 41 ஆயிரத்து 349 ரூபாவை ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இவ்வாறு நேற்றுக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் கணக்காளர் கடந்த 18 ஆம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பும் போது கட்டுநயாக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் அங்கிருந்து அன்றையதினமே தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சந்தேக நபரான பெண் இருந்த பிரதேசம் அடையாளம் காணப்பட்டு  அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கம்பஹா – திமுது மாவத்தை பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46