ஆலய பூஜையினை மேற்கொள்ள அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கெம்பியன் கிழ்பிரிவு தோட்ட மக்கள்  இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம்  ஒன்றை முன்னெடுத்து இருந்தனர்.

பொகவந்தலாவ கெம்பியன் கீழ் தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்தில் உள்ள ஆலயத்தில்  தோட்ட பொதுமக்களால் ஏற்பாடு  செய்யபட்டள்ள பூஜை வழிபாட்டினை மேற்கொள்வதற்கு அரை நாள் விடுமறை வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கெம்பியன் கீழ் பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம்  ஒன்றை முன்னெடுத்து இருந்தனர் .

இன்று காலை தொழிலுக்கு சென்று தோட்ட தலைவர் மார்களால் தோட்ட உதவி முகாமையாளரிடம் இன்றய தினம் தோட்ட ஆலயத்தில் பூஜை ஏற்பாடுகள் இருப்பதானால் அதற்காக அரை நாள் விடுமுறை வழங்க பட வேண்டுமென கோரிய போது தோட்ட தொழிலாளர்களை நாளை முதல் தொழிலுக்கு வரவேண்டாமென தோட்ட உதவி முகாமையாளர் அறிவித்ததாக  ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் .

மேலும்  இவ்விடயம் குறித்து மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தி எங்களுக்கான உரிய தீர்வினை பெற்றுதருமாறு கோரிக்கை விடுத்தனர்.