மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் கைபேசியை எடுத்துச் செல்ல மீண்டும் அனுமதியளிக்கப்படுவதாக ஆலய நிர்வாம் அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வரும் பக்தர்கள் கைபேசிகளை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. கோவிலுக்கு வெளியே கைபேசிகளை பாதுகாக்க லொக்கர் வசதி அமைக்கப்பட்டது. இந்நிலையில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதன் காரணமாக கைபேசி லொக்கரில் போதிய இடமில்லாத காரணமாக சித்திரை திருவிழா முடியும் வரை பக்தர்கள் கோவிலுக்குள் கைபேசியை கொண்டு வர கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.