மேல், தென் மாகாணங்களில் 30 பேர் கைது; 13 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!!!

Published By: Digital Desk 7

20 Apr, 2018 | 11:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் பொலிஸ் விஷேட அதிரடிப்படை மேல் மற்றும் தென் மாகாணங்களில் மட்டும் முன்னெடுத்த விஷேட நடவடிக்கைகளில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன்  30 பேர்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 5 கைக்குண்டுகள் 13 துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களும் இக்காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குனசேகர தெரிவித்தார்.

 2018 ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து கடந்த 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிகளிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இக்காலப்பகுதியில் 5 கைக்குண்டுகள், இரு ரீ56 ரக துப்பாக்கிகள், ரீ56 ரக துப்பாக்கி மெகசின் ஒன்று,  ரீ56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 151 உம் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை விட 7 வாள்கள். ஒரு கைத்துப்பாக்கி, இரு கைத்துப்பாக்கி மெகசின்கள்,  9 ரிவோல்வர்கள் மற்றும் ரிவோல்வர் கைத்துப்பககிகளுக்கு பயன்படுத்தப்ப்டும் 185 தோட்டாக்கள், 810 வேறு தோட்டாக்கள் என்பனவும் பொலிஸ்  அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைவிட ஹெரோயின் 56 கிராமும், ஐஸ் போதைப் பொருள் 111 கிராமும் அதிரடிப் படையினரால் மீட்கபட்டுள்ள நிலையிலேயே 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27