(எம்.சி.நஜிமுதீன்)

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் நேற்று ஏற்பட்டுள்ள வெடிப்பானது ஆபத்தானதல்ல. இதேவேளை மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் தமது காணிளை இழந்தவர்களுக்கு மிக விரைவில் நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். 

மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில் இன்று அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.