உலகில் 95 சத­வீ­த­மான மக்கள் உலக சுகா­தார ஸ்தாப­னத்தால்  வரை­ய­றை­செய்­யப்­பட்ட மாசாக்க நிலையை விடவும் அதி­க­ளவில் மாசாக்­க­ம­டைந்த வளியைக் கொண்ட பிர­தே­சங்­களில் வாழ்­வ­தாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

சுகாதார விளைவுகள் நிறுவகத்தால்  மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் வளி மாசாக்கத்தால் கடந்த வருடம் உலகமெங்கும் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 சுகாதாரம் குறித்து வரையறை செய்யப்பட்ட வளிமாசாக்க அளவிலும் மூன்றரை மடங்கு அதிகமான வளிமா சாக்கத்தைக் கொண்ட சூழலில் 60  சதவீதமானோர் வாழ்வதாக மேற்படி ஆய்வு கூறுகிறது.