மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மயாகஸ்வாவிலிருந்து புத்தளத்தை  நோக்கி இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மயானத்திற்கு அருகிலிருந்த வளைவில் திரும்பியபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த இராணுவவீரர் சிகிச்சைக்காக அருகிலிருநு்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இராணுவவீரர் 22 வயதுடையவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.