மணிரத்னத்தின் உதவியாளர் தனாவின்  இயக்கத்தில் வெளியான "படைவீரன்" என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அம்ருதா.

அம்ருதா தற்போது விஜய் அண்டனி நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் காளி படத்திலும் நடித்திருக்கிறார்.

திரையில் தோன்றுவதற்காக எம்மாதிரியான பயிற்சிகளை பெற்றீர்கள்? என ஊடகவியலாளர்  கேட்டபோது,

"திரையில் நடிகையாக அறிமுகமாகும் போது சில பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன். அங்கு ஏன் சென்றேன் என்றால் படபிடிப்பு தளத்தில் நடிக்கும் போது படபடப்பிற்கு ஆளாகக்கூடாது என்பதற்காகச் சென்றேன்.

அங்கு கற்றுக்கொடுத்ததை உற்றுநோக்கி கற்றுக் கொண்டேன். ஆனால் எம்மைப் பொருத்தவரை எந்த கலை வடிவத்தையும் முழுமையாக கற்க இயலாது. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் அதன் எல்லைகளை விரிவடையச் செய்து கொண்டேச் செல்லலாம்.’ என்றார் நடிகை அம்ருதா.