இந்தியாவின் கொல்கதா நகரில் நேற்று காலையில் இருந்து  வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் உயிரிழந்துள்னர்.

இந்நிலையில் குறித்த புயலால் பலர் காயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவில் பெரிய அளவில் புயல் வீசியுள்ளது. இந்தப்புயல் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக வீசியுள்ளது. 

அதன்பின், மிகவும் வேகமான காற்று வீசியது. இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

முதலில் 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீச ஆரம்பித்த புயல் இறுதியில் அதிக வேகமெடுத்தது. இதனால் இறுதி நேரத்தில் 105 கிலோ மீற்றர் வேகத்தில் புயல் வீசியது.

இது மரங்கள், சிறிய வீடுகளை அடியோடு பெயர்த்து எடுத்தது. இதனால் வீதியில் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  2 மணி நேரம் விமானம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த புயல் காரணமாக மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில்  20 க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்துள்ளனர். பலர் திடீர் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு காலநிலை இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது