அமெரிக்காவில் கணவனை பிரிந்த 72 வயது மூதாட்டி 19 வயது இளைஞரை திருமணம் முடித்த சம்பவம் பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னிசி  மாகாணத்தை சேர்ந்த 72 வயதான  அல்மேடா தனது 77 வயதான கணவரை கடந்த 2016ஆம் ஆண்டு பிரிந்துள்ளார். 

தனிமையில் வாழ்ந்து வந்த அல்மேடா ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 19 வயதான கேரி ஹார்ட்விக் என்ற இளைஞரை சந்தித்து  அவருடன் நட்பாகியுள்ளார்.

இந்த நட்பானது பின்னர் இருவருக்குள் காதலாக மாற ஒருவரையொருவர் உயிராக நேசிக்க ஆரம்பித்ததையடுத்து அல்மேடாவும், கேரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

முதலில்  இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்த நிலையில் பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டனர்.

கேரிக்கும், அல்மேடாவுக்கும் இடையில் 58 வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 

அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ள நிலையில் இந்த உறவை ஏற்க முடியாமல் ஆரம்பத்தில் தவித்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதை ஏற்று கொண்டுள்ளனர்.

அல்மேடா கூறுகையில்,

"காதலுக்கு வயதில்லை என்பது என் வாழ்க்கையில் நிரூபணமாகியுள்ளது. நான் உயிராக நேசிக்கும் கேரியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்" என கூறியுள்ளார்.

கேரி கூறுகையில்,

"அல்மேடாவின் அழகான நீல நிற கண்களை பார்த்த உடனேயே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.