மீனவர் ஒருவர்  மீன் பிடிக்க  சென்றபோது அவரது வலையில் அதிஷ்டவசமாக 20 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கிய சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவருக்கு நேற்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக  20 ஆயிரம் கிலோ நிறையுடைய பாரை மீன்கள் அவரது கரை வலையில் சிக்கியுள்ளன. இவ்வாறு அவரது வலையில் சிக்கிய மீன்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்  கிடைத்துள்ளன. 

இந்நிலையில் இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் நேற்றைய தினமே விற்கப்பட்டுவிட்டன.

இருப்பினும் இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.