கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில்  நேற்று இரவு 37 கிலோ கிராம் கேரள கஞ்சா  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன் பெறுமதி ஐம்பது இலட்சம் ரூபா  என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பூநகரி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய  பூநகரி  சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது யாழ்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு  பழைய இரும்பு மற்றும் பிளாஸ்ரிக் பொருள் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்படும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கேரள கஞ்சாவே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அவர்கள் மூவரும் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.