(லியோ நிரோஷ தர்ஷன்)

கூட்டு எதிரணியின் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தயாராகி வருகின்றது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணி அமைத்து செயற்படும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்கு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் தொடர்ந்தும் தனித்து செயற்படுவார்களாயின் அவர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு அலுவலகம் திறந்ததும் அவருடன் இணைந்து செயற்படுவதும் எந்த வகையில் கட்சியின் ஒழுக்கத்திற்கு முரணானது என்பதை  முதலில் கூற வேண்டும். அதன் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை யாருக்கு அவசியம் என பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.