இலங்கையில் இலாபகரமானதும் வளர்ந்துவரும் துறையாகவும் கட்டுமானப்பணியானது காணப்படுகின்றது. கட்டுமானத்துறை தொழில்நுட்பத்தில் சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகளின் காரணமாக நீடித்த, நிலைத்து நிற்கக்கூடிய மற்றும் கட்டுப்படியான கட்டுமான பொருட்களிற்கான தேவையும் வளர்ந்து வருகின்றது. 1986ம் ஆண்டில் நிறுவப்பட்ட மெரிடியன் ஸ்டீல்ஸ் கடந்த மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக இத்தேவையை சந்தித்து வருகின்றது. 

எகிரும்பு சந்தையில் தனது 32 வருட காலத்தை சமீபத்தில் நிறைவு செய்த இந்நிறுவனமானது வளர்ந்துவரும் கட்டுமானத்துறைக்கு தனிப்பயனாக்கப்பட்ட சுருள் வடிவிலான தொகுப்புக்களை வழங்குகின்றது. மெரிடியன் ஸ்டீல்ஸ் ஆனது துருப்பிடிக்காத எகிரும்பு, இசேலான எகு, கால்வெனைஸ் எகு, கால்வல்யூம், துத்தநாக எகு, அலுமினியம், செம்பு மற்றும் பித்தளை ஆகிய மூலப்பொருட்களை பயன்படுத்தியே தனது தொகுப்புக்களை உற்பத்தி செய்கின்றது. இந்நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தின் கட்டமைப்பு மற்றும் அழகுபடுத்தல் தேவைகளிற்கு ஏற்றவகையில் 30ற்கும் மேற்பட்ட அளவுகளில் நான்கு வெவ்வேறுபட்ட வகையான வடிவங்களில் சுருளாக்கப்பட்ட தொகுப்புக்களை உற்பத்தி செய்கின்றது. 

இந்நிறுவனத்தின் பங்குதாரரான எஸ். மகாதேவா தங்களது தயாரிப்புக்களை மேலும் விவரிக்கையில், “கட்டுமானத்துறையின் கோரிக்கைகளானது தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றதாக காணப்படுகின்றது. கட்டிடக்கலை மற்றும் உட்கட்டமைப்பு வடிவமைப்பானவை மேலும் பகட்டானதாகவும் நுண்ணிய வேலைப்பாடுடையதாகவும்  மாறிவருகின்றமையினால் புத்தாக்க தீர்வுகளிற்கான கோரிக்கையானது மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது. இலங்கையின் வளர்ந்துவரும் கட்டுமானத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தாக்க தீர்வுகளை வழங்குவதில் மெரிடியன் ஸ்டீல்ஸ் ஆனது அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. 

செலவீனங்களை குறைவான மட்டத்தில் தக்கவைக்கும் அதேவேளையில் குறிப்பிட்ட வேலையின் செயல்திறனை அதிகரிக்கவே சுருள் வடிவலான தயாரிப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பயன்பாட்டிற்கான பொருத்தமான தொகுப்பை தெரிவு செய்வதன் மூலம் மொத்த செலவில் 50 வீதம் குறைக்கவியலுமாக காணப்படுகின்றது. இது நன்கு நிருபிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியாக பல வாகன உற்பத்தியாளர்கள், சூரிய மின்சக்தி தொழிற்துறைகள், மின்சார பேனல்கள் மற்றும் உறையிடுதல் கட்டமைப்பாளர்கள் மற்றும் எகு கட்டமைப்பாளர்கள் என்பனர் ஏராளமான சுருள் வடிவிலான தொகுப்புக்களை பயன்படுத்துகின்றனர். இந்த எகு தொகுப்புக்களானவை கட்டிட உட்கட்டமைப்பு வேலைகளான பார்டிசனிங், ப்ரேம் வேலைகள் மற்றும் சேமிப்பு அடுக்குகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.” என்று குறிப்பிட்டார்.

அவர்களது துருப்பிடிக்காத உருக்குகளின் தொகுப்புக்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “துருப்பிடிக்காத உருக்கானது வீட்டு கட்டுமானப்பணிகளின்; முடிவுறும் நிலைகளில் மிகவும் தேவைப்படுகின்ற போதிலும் அதன் உயர் செலவுகள் காரணமாக பெரும்பாலும் மேற்பார்வை செய்யப்படுகின்றது. எங்களது புதிய தயாரிப்புக்களான Purlins, Channels மற்றும் L sections  என்பன இணைந்து பயன்படுத்தப்படுவதுடன் களஞ்சிய அடுக்குகள், கேட்டுகள் மற்றும் யன்னல் சட்டங்களை தயாரிப்பதில் முக்கியமானதாக நிருபிக்கப்பட்டுள்ளதுடன் பாரம்பரிய முறைகளான சீட் மற்றும் குழாய் கட்டமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் இலாபகரமானதாக காணப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் சிறந்த திருப்தியுடன் பல செயற்றிட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

எங்களது தனிப்பட்ட ஸ்டேட்-ஒப்-த-ஆர்ட் முறைமையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறந்த தரம் வாய்ந்த மூலப்பொருட்களை பயன்படுத்தியே மெரிடியன் ஸ்டீல்ஸ் ஆனது C Purlins, U Channels, L sections and Hat Sections (Furring Channels)  என்பனவற்றை தயாரிக்கின்றது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்களது விருப்ப தயாரிப்பை குறைந்தளவு காலத்திற்குள் பெறுகின்றனர் என்பதை உறுதிப்படுத்த தரமான கட்டுப்பாட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுமானப்பணியாளர்கள் மற்றும் கட்டுமானத்துறை நிறுவனங்கள் மூலம் அதிகமாக சிபாரிசு செய்யப்படுவதுடன் ஆயுட்கால வாடிக்கையாளர்களை சந்தை முன்னோடியான மெரிடியன் ஸ்டீல்ஸ் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களிற்கு 0112 325014 எனும் தொலைபேசி இலக்கத்தில் மெரிடியன் ஸ்டீல்ஸ் ஐ தொடர்பு கொள்க அல்லது இல 459, பழைய சோனக வீதி, கொழும்பு 12 எனும் முகவரியிலமைந்துள்ள அவர்களது காரியாலயத்திற்கு வருகை தரவும்.