பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் இயந்திரப்பகுதியில் திடீரென தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தையடுத்து குறித்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இவ்வனர்த்தம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இடம்பெற்றுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்டுள்ளபோது விமானத்தில் 1380 பேர் பயணித்துள்ளனர் . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளார். 

பிலடெல்பியாவின் வடமேற்கில் இருந்து சுமார்  70 மைல் தூரத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.